'Nam Tamilar Katchi is a separatist movement' - IPS Varunkumar speech

Advertisment

நாம் தமிழர் கட்சியினருக்கும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. தன்னுடைய குடும்பத்தாரை இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள்பதிவுகளை வெளியிட்டதாக நடவடிக்கை எடுக்க வருண்குமார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதேபோல் 'தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் பலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது உங்களுக்கு தெரியாதா?' என்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம் என வருண்குமார் பேசியுள்ளார். சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் வருண்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி எஸ்.பி வருண்குமார் அதில் பங்கேற்று பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அங்கு சைபர், கிரைம் மற்றும் இணையதளம் மிரட்டல் உள்ளிட்டவற்றை குறித்து மாநாட்டில் பேசிய ஐபிஎஸ் வருண்குமார், 'நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினரால் தானும் தனது குடும்பமும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டோ'ம் என பேசி உள்ளார்.

Advertisment

நாம் தமிழர் கட்சியை உடனான மோதல் போக்கு காரணமாக அண்மையில் வருண்குமார் ஐபிஎஸ் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.