Advertisment

விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு!

Nalini's petition in the Supreme Court for freedom!

Advertisment

விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி இன்று (11/08/2022) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தன்னை நிரந்தரமாக விடுதலைச் செய்யக்கோரி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தனக்கு இடைக்கால ஜாமீனை வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இந்தமனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினிக்கு தமிழக அரசு ஏழாவது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

nalini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe