Advertisment

வைரம் கிடைப்பதாக நிலத்தை தோண்டும் மக்கள்... ஆய்வு நடத்த நாகலாந்து அரசு முடிவு...

nagaland government to reasearch on mon for diamond

நாகாலாந்து மாநிலத்தின் ஒரு கிராமப்பகுதியில் நிலத்தில் வைரங்கள் கிடைப்பதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவிய நிலையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் வச்சிங் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிங் கிராமத்தில் நிலத்திலிருந்து வைரக்கற்கள் கிடைப்பதாக அண்மைக்காலமாகத் தகவல்கள் பரவி வந்தன. மேலும், வைரக்கற்கள் எடுப்பதுபோன்ற புகைப்படங்களும், இதற்காக மக்கள் நிலத்தைத் தோண்டும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. மேலும், நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட சிறிய துண்டுகளாக மிளிரும் படிகக்கற்களின் படங்களும் இணையத்தில் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாகாலாந்தின் புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வச்சிங் பகுதியில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய முதற்கட்டமாகக் குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பிறகு புவியியலாளர்களான அபெந்துங் லோதா, லாங்க்ரிகாபா, கென்யெலோ ரெங்மா மற்றும் டேவிட் லூபெனி ஆகியோர் அடங்கிய குழு வாஞ்சிங் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

diamond mine nagaland
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe