Advertisment

“மகன் உயிரோடு வரப்போவதில்லை... ஆனால் கொலைகாரன் யாருன்னு தெரிச்சிக்கணும்” - போராடும் தந்தை 

Mystery continues in Adil Mohammad case of Kerala state

Advertisment

கேரள மாநிலம் கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த நஜீம்-சுஜிதா தம்பதியினரின் மகனான ஆதில் முகம்மதுகடந்த மே 6 ஆம் தேதிபயங்கர வெட்டுக் காயத்துடன் கொல்லப்பட்டு குளத்தில்மிதந்த சம்பவத்தில்இதுவரை குற்றவாளி யாரென்ற மர்மம் தொடர்கிறது.

ஆதில் முகம்மதுவின் தாய்மாமன் சுனில் கூறுகையில், "மே 6-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த ஆதில் முகம்மதுவை, அஸீஸ்தான் விளையாட அழைத்துச் சென்றான். மாலை 5.30 மணிக்கு அஸீஸ் மட்டும் தனியா நடந்து வந்தான். ஆதில் முகம்மது எங்கேன்னு கேட்டபோது திருதிருன்னு முழிச்சிட்டு முன்னுக்குப் பின் முரணா பேசினான். 'மொபைல் கேம் ப்ரண்ட் ஒருத்தனோடு ஆதில் போனான்' என்றும்'இறச்சகுளத்தில் ஒரு கோவிலில் சாமியாட்டம் பார்க்கப் போனான்' என மாற்றி மாற்றிப் பேசினான். ஆதில் பிணமாக மீட்கப்பட்ட பிறகுபோலீஸ் விசாரணையில், "குளத்தின் அருகில் உட்கார்ந்து இருவரும் மாங்காய் தின்னோம். மிளகுப் பொடி ஆதிலின் பனியனில் பட்டதால் அதைக் கழுவ குளத்துக்குச் சென்றான். மீன் வளர்க்க முட்டை பாசி எடுக்க குளத்துக்கு போனான்...' என்றும் முரணாகக் கூறினான். ஆதிலின் செருப்பு குறித்தும் முரண்பாடாகப் பேசினான். ஆதிலின் பாடி கிடைத்தபோது துபாயிலிருந்து வந்த அஸீஸின் தந்தையோதிருவிதாங்கோட்டில்முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமான உறவினரின் வீட்டில் மட்டும் இரு நாட்கள் இருந்துவிட்டுச் சென்றார்'' என்றார்.

ஆதில் முகம்மதுவின் தந்தையும் கேரளா காங்கிரசின் முக்கிய பிரமுகருமான நஜீம் நம்மிடம், "போலீசாரின் விசாரணை திருப்தியில்லாததால் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சதீஷன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். முதல்வர் பினராய் விஜயனையும் நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் விசாரணையில் ஒரு சதவிகிதம்கூட முன்னேற்றமில்லை. இதனால் மீண்டும் முதல்வர் பினராய் விஜயனின் செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனிடம் முறையிட்ட பின், சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டது. எனினும் இதுவரை குற்றவாளியைக் கண்டறியவில்லை. இன்னும் எஃப்.ஐ.ஆர். கூட பதியவில்லை. என் மகன் இனி உயிரோடு வரப்போறதில்லை என்றாலும் யார் கொலைகாரன்னு தெரிஞ்சுக்கத்தான் போராடுறோம்'' என்றார்.

Advertisment

police Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe