Mysterious substance exploded at home; police investigation

Advertisment

புதுச்சேரியில் வீட்டில் மர்மப்பொருள் வெடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர்கள் குருமூர்த்தி-சாரதா தம்பதியினர். இன்று காலைஇவர்களதுவீட்டில் மர்மப்பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதில் சாரதா படுகாயத்துடன் கீழே விழுந்தார். வெடிச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரியக்கடை போலீசார் சாரதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் வீட்டுக்குள் சோதனை நடத்தியதில் இதுவரை வெடித்த மர்மப்பொருள் என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலிண்டர் வெடிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் சாரதா ஏதேனும் தகவல் தெரிவித்தால் மட்டுமே வீட்டில் வெடித்த மர்மப்பொருள் என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மப்பொருள் வெடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.