Mysterious individuals attempted to hit a young woman in karnataka

24 வயது இளம்பெண்ணை, இரண்டு பேர் துரத்தி பாலியல் வன்கொமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம், கம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். இந்த நிலையில், வெளியே சென்ற அந்த பெண் நேற்று அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டிற்கு வருவதற்காக வாடகை வண்டி ஒன்றை செல்போன் மூலம் புக் செய்துள்ளார்

Advertisment

வீட்டிற்கு சில தூரமே இருந்த நிலையில், வாடகை வண்டி அங்கு வந்தது. இதையடுத்து, அந்த பெண் காரில் ஏறியவுடன், எங்கிருந்தோ வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் காரில் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர். இதில் பதற்றமடைந்த அந்த பெண், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கார் ஓட்டுநரும், மர்ம நபர்களில் ஒருவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார்.

இதற்கிடையில், காரில் இருந்து வெளியேறிய பெண், தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். ஆனால் மற்றொரு நபர், அந்த பெண்ணை துரத்திச் சென்று தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள், அங்கு விரைந்தனர். அப்பகுதி மக்கள் வருவதை பார்த்த, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன் பின்னர், அந்த பெண் போலீஸுக்கு தகவல் கொடுத்து இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

Advertisment

அந்த புகாரின் பேரில், பாலியல் தொல்லை கொடுத்து தப்பியோடிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது