Advertisment

மைசூரில் பயங்கர தீ விபத்து; தரைமட்டமான பட்டாசு குடோன்

mysore hubli industrial park fire incident

கர்நாடகமாநிலம் மைசூரில் உள்ள ஹூப்ளி தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பட்டாசுகுடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பட்டாசு குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் இருப்புவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த குடோனில் திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த கட்டடங்கள் முழுவதும் வெடித்து தரைமட்டமானது. மேலும் குடோனை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு புகைமண்டலமாக காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police fire mysore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe