மீசை வினித் மீண்டும் கைது

Mustache vinith again arrested

கேரளாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்மீசை வினித். இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்த நிலையில், தற்போது வழிப்பறி சம்பவத்தில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி பெட்ரோல் பங்கின் மேலாளர்ஒருவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2.5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரைவழிமறித்து பிடித்து மிரட்டி 2.5லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவனந்தபுரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மீசை வினித் மற்றும் அவனது கூட்டாளி ஜீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளரை துரத்தி வழிப்பறியில்ஈடுபட்டது தெரியவந்தது.

Kerala police
இதையும் படியுங்கள்
Subscribe