Muslim husband who divorced his wife because she refused to be close to his boss

திருமண உறவை முறித்துக்கொள்வதற்காகக்கணவன், மனைவியிடம் மூன்று முறை ‘தலாக்’ எனும் வார்த்தையைச் சொல்லும் ‘முத்தலாக்’ நடைமுறை இஸ்லாம் மதத்தில் இருந்தது. இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்று அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் தெரிவித்து மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு முத்தலாக் நடைமுறையை தடை செய்தது. இந்த நிலையில், தனது முதலாளியுடன் நெருக்கமாக இருக்க மறுத்ததால் இரண்டாவது மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்’ கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபருக்கு, இந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. மென்பொருள் பொறியாளரான இவர், தனது 28 வயது மனைவியிடம் பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய ரூ.15 லட்சம் தேவை என்றும் அந்த பணத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு அந்த நபர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறி அந்த நபர், தனது முதலாளியுடன் நெருக்கமாக இருக்குமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

Advertisment

இதற்கு மறுப்பு தெரிவித்ததால், மனைவியை மேலும் துன்புறுத்தி இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண், தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.