ADVERTISEMENT

குடியிருப்புகளுக்கு முன் குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்கள்!-ஆந்திரா ஆதங்கம்!

08:43 PM Aug 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசுத் துறையினர், அதுவும் நகராட்சி ஊழியர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வார்களா எனக் கேள்வி எழுந்தாலும், உண்மையிலேயே நடந்திருக்கிறது.

ஆந்திராவில், நகரங்களில் குடியிருக்கும் பொதுமக்கள், ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை எடுத்துச் செல்வதற்காக, நகராட்சிக்கு ரூ.120 வரி செலுத்த வேண்டும். இது தவிர, நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாதம் ரூ.30 குப்பை வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால், விஜயநகரத்தில் உள்ள சாய் அமிர்தா அபார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், கடந்த மாதம் நகராட்சிக்கு குப்பை வரி செலுத்தத் தவறிவிட்டனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் குப்பை வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள், கூடை கூடையாகக் குப்பையை எடுத்து வந்து,சாய் அமிர்தா அபார்ட்மெண்ட் அடுக்குமாடிக் குடியிருப்புகள் முன்பாகக் கொட்டி விட்டுச் சென்றனர்.

இதனால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் பொது மக்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், நகராட்சி ஊழியர்கள் கடமையே கண்ணாக, குப்பையை கொட்டி விட்டுச் சென்றது அந்த ஏரியா மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி ஊழியர்களின் இந்தச் செயலுக்கு அரசியல் ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT