8 காவல்துறை மகளிர் உயரதிகாரிகளை காவல்நிலைய தலைமை பொறுப்பாளர்களாக நியமித்து மும்பை காவல்துறை சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் வேறெந்த பகுதியிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி மும்பை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியான நிலையில், நெட்டிசன்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Trying to keep up with the city’s trend of setting examples! #InspiredByMumbaipic.twitter.com/cEyEu7GOmg
— Mumbai Police (@MumbaiPolice) March 31, 2018
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், நாடு முழுவதிலும் உள்ள காவல்துறையினரில் 7.28% பேர் மட்டுமே மகளிர் என்றும், காவல்துறை உயர்பதவிகளை 1%க்கும் குறைவான பெண்களே வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றம் குறித்த விழிப்புணர் சமூகத்தில் வேகம் பெற்றிருப்பதாக சொல்லப்பட்டாலும், நடைமுறையில் அது தேக்கமடைந்திருப்பதையே இந்த அறிக்கை கூறுகிறது. மகளிர் முன்னேற்றத்தின் உண்மையான வெளிப்பாடு, மாபெரும் சாதனை, மும்பை காவல்துறையின் மகுடத்தில் மற்றுமொரு சிறகு என நெட்டிசன்கள் இந்த முன்னெடுப்பை கொண்டாடி வருகின்றனர்.