மும்பை அருகே உள்ள ஓஎன்ஜிசி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

mumbai ongc fire accident

மும்பையில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள யுரானில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீ ஆலையின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று 2 மணிநேரம் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisment

இந்த விபத்தில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த ஆலையில் இருந்து ஒரு கி.மீ சுற்றளவிற்கு உள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பில் பாதிப்பில்லை என்று ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.