ADVERTISEMENT

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு; நிப்டி 14,800 புள்ளிகளில் வர்த்தகம்!

02:05 PM Feb 22, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT



வாரத்தின் முதல் நாளான திங்களன்று (பிப். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், தடாலடியாக 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 14,800 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

ADVERTISEMENT

மருந்து தயாரிப்பு துறைகள், நிதிச்சேவை துறைகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டதே சந்தையின் சரிவுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு சந்தைகளும் முதல் செஷனிலேயே கிட்டத்தட்ட 1 சதவீதத்திற்கு மேல் சரிவு கண்டிருந்தன. அதேநேரம், பங்குகளின் விலைகள் குறைந்தபோது சில்லரை முதலீட்டாளர்கள் பலரும் பங்குகளைக் கணிசமாக வாங்குவதும் நடந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகளை அளித்து வருகின்றனர்.

''அமெரிக்காவில் பத்து ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வளர்ச்சி 1.36 மடங்கு மட்டுமே பலன் தரக்கூடும் என்ற அறிவிப்பும், ஜோ பிடனின் 1.9 ட்ரில்லியன் டாலர் நிதி திரட்டும் புதிய பணக்கொள்கையும் கடுமையான பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் சரிவை ஏற்படுத்தும்,'' என்கிறார் ஜியோஜித் நிதிச்சேவை நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு முதன்மை ஆலோசகர் வி.கே.விஜயகுமார்.

மேலும் அவர், ''மஹாராஷ்ட்ராவில் புதிய வகை கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதும் உள்நாட்டு பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்,'' என்றும் சொல்கிறார்.

அமெரிக்காவின் புதிய பணக்கொள்கையால் ஜப்பான் நாட்டு பங்குச்சந்தையிலும் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது. என்றாலும், இன்றைய வர்த்தகத்தின் பிற்பகுதியில் 1.0 சதவீதமும், கொரியா சந்தைகள் 0.4 சதவீதமும் மெதுவாக ஏற்றம் கண்டன. ஆனாலும், சீன பங்குச்சந்தைகள் 1.2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.

பகல் 1.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் அதிகபட்சமாக 918 புள்ளிகள் (1.84 சதவீதம்) சரிந்து 49,971 புள்ளிகளும், நிஃப்டி 240 புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்) 14,741 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின.

நிஃப்டியில் ஜேஎஸ்டபுள்யூ, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டிருந்தன. அதேநேரம், எம் அண்டு எம், டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டி, ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் 3 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT