airplane

Advertisment

மும்பையில் இருந்து மங்களூருக்கு செல்லும் விமானத்தில் சென்ற இளைஞர் தனது தோழிக்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டு இருந்துள்ளார். அவரது தோழி அவருக்கு "நீ ஒரு வெடிகுண்டு மனிதர்" எனச் செய்தி அனுப்ப, அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அச்செய்தியை பார்த்து பயந்து விமான அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க விமானம் மீண்டும் மும்பையில் தரை இறக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை மீண்டும் சோதனை செய்தனர்.

விசாரணையின் முடிவில் அவரது குறுஞ்செய்தி தோழியால் விளையாட்டாக அனுப்பப்பட்டது என உறுதி செய்த பின் விமானத்தை மும்பையிலிருந்து கிளம்ப அனுமதித்தனர். இதனால் 11 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 6 மணி நேரம் தாமதமாக 5 மணிக்கு புறப்பட்டது. நகர கமிஷனர் இது குறித்து கூறுகையில் இது நண்பர்களுக்கு இடையே நடந்த சாதாரண உரையாடல் என்பதால் இந்த விவகாரத்தின் மீது எந்த விதமான புகாரும் பதியவில்லை எனத் தெரிவித்தார்.