Advertisment

பொது கழிவறை நீரில் இட்லி செய்து விற்ற ஹோட்டல்காரர்... விசாரணைக்கு உத்தரவு...

இட்லி கடை வைத்திருக்கும் ஒருவர் பொது கழிவறை நீரை பிடித்து சமையலுக்கு உபயோகிக்கும் 45 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

mumbai man uses public tiolet water to make tiffin

மும்பையின் போரிவேலி பகுதியில் ரயில்நிலையத்தில் அருகே இட்லி கடை வைத்திருக்கும் ஒருவர், இட்லி வேகவைப்பதற்கு அந்த ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்து தண்ணீரை ஒரு கேனில் பிடித்து செல்கிறார். அதனை ஒருவர் படம்பிடித்த நிலையில் அவருடன் சாதாரணமாக பேசியபடி அதே நீரை பிடித்து செல்கிறார். இந்த நீரை கொண்டு அவர் சமைத்து அந்த பகுதியில் விற்று வந்துள்ளார்.

Advertisment

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், உணவு மற்றும் மருந்துகள் மேலாண்மை அமைப்பு இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் செயல். வீடியோவில் இருக்கும் நபர் யார் எனத் தேடி வருகிறோம். அந்த நபர் கிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவரிடம் உணவகம் நடந்த லைசன்ஸ் இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதிப்போம். தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, ரயிலில் டீ விற்பவர்கள் கழிவறை நீரைப் பிடித்துப் உபயோகிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

railway Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe