பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.

Advertisment

hggfgfhgfh

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மும்பையை சேர்ந்த 44 வயதாகும் முர்தாஜ் ஏ.ஹமீது என்ற மாற்றுத்திறனாளி ஆராய்ச்சியாளர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 110 கோடியை உதவி தொகையாக தருவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த தொகையை பிரதமரிடம் நேரடியாக கொடுப்பதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் அனுமதி கேட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களின் தியாகமும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உடலிலும், ரத்தத்திலும் கலந்துள்ளது. இந்த எண்ணம் தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என என்னை தூண்டியது. நான் சேர்த்து வைத்த சம்பள பணத்தில் இருந்து இதனை அளிக்க முடிவு எடுத்திருக்கிறேன். தன் உயிரை கொடுத்து நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த தொகையை கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன் என முர்தாஜ் ஏ.ஹமீது தெரிவித்துள்ளார்.