Advertisment

தாயை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சடலத்துடன் வசித்த இளம்பெண்

mumbai lalbaug young woman and her mother incident 

மகாராஷ்டிராமாநிலம் மும்பை லால்பாக்கில்உள்ள குடியிருப்புஒன்றில் 55 வயது தாயாருடன்23 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு சில மாதங்களாக தாயாரின் சகோதரர், அதாவது அப்பெண்ணின் மாமா தனதுசகோதரியைச் சந்திக்க பலமுறை வீட்டுக்குவந்துள்ளார். அப்போது எல்லாம் அம்மா வீட்டில் இல்லை என தனது மாமாவை அப்பெண்வீட்டில் இருந்து அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

வழக்கம்போல் நேற்று முன்தினம்தாயின் சகோதரர்தனது சகோதரியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சந்தேகமடைந்த தாயின் சகோதரர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரிப்பதற்காக போலீசார் இளம்பெண்ணின்வீட்டிற்கு சென்ற போது தனது தாயார் வீட்டில் உறங்கிக் கொண்டுஇருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணின் மீதுபோலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அதிரடியாக வீட்டிற்குள்நுழைந்த போலீசார் வீட்டின் படுக்கை அறையில் இருந்த அலமாரியில்இருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்து துர்நாற்றம்வருவதைஅறிந்து அதனை சோதனை செய்தபோது தாயாரின்சடலம்துண்டு துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. மேலும் தண்ணீர் தொட்டியில் மேலும் சில பாகங்கள் இருந்தன.

Advertisment

இதுகுறித்து போலீஸ்தெரிவிக்கையில், "மகள் தான் தனது தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி அலமாரியில் வைத்துள்ளார். மேலும் தனது தாயின்சடலத்துடன் 3 மாதங்களாக வசித்தும் வந்துள்ளார்" எனத்தெரிவித்தனர். மேலும் எதற்காகஇந்த கொலை சம்பவம்நடைபெற்றதுஎன போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போதுமும்பையில் பெரும் பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.

Maharashtra Mumbai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe