Advertisment

பெற்ற மகளை துண்டுதுண்டாக வெட்டிய தந்தை... உறைய வைக்கும் பின்னணி...

பெற்ற மகளை துண்டுதுண்டாக வெட்டி, உடலை பெட்டிக்குள் வைத்து தந்தையே ஆட்டோவில் எடுத்துச்சென்று சாலையில் வீசியெறிந்து கொடூரம் மும்பையில் நடந்துள்ளது.

Advertisment

mumbai father daughter issue

உத்தரபிரதேச மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் திவாரி (47) பணியின் காரணமாக தனது மகள் பிரின்சியுடன் (22) மும்பையில் வசித்து வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு இரண்டு பெட்டிகளுடன் இவர் ஆட்டோவில் ஏறியுள்ளார். பெட்டியிலிருந்து கடுமையான துற்நாற்றம் வீசியுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுனர் சந்தேகமடைந்துள்ளார். அப்போது கல்யாணி ரயில் நிலையத்தில் இறங்கிய திவாரி ஒரு பெட்டியை வீசி எறிந்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதனால் பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு அரவிந்த் திவாரி தப்பித்த நிலையில், அங்கு வந்த போலீசார் பெட்டியை கைப்பற்றினர்.

Advertisment

அதனை திறந்து பார்த்த போது, சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து திவாரியை போலீசார் கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

அவரது மகள் பிரின்சி வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவாரி, மகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் காதலை விட முடியாது என பிரின்சி உறுதியாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த திவாரி, மகளை மிரட்டியுள்ளார். பின்னர் அவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைத்துள்ளார். மாற்று சமூக இளைஞரை காதலித்ததால் தந்தையே தனது மகளை கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

love Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe