ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமானங்களையும் ஆய்வு செய்துவருவதாக விமான போக்குவரத்து ஜெனரல் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையிலிருந்து மேற்குவங்கம் துர்காபூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காற்றழுத்த மாறுபாட்டில் சிக்கி சேதமடைந்தது. இதில், விமானத்தில் பயணித்த 14 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான 91 விமானங்களையும் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.