நாளை மறுநாள் நடைபெறும் மக்களவை வாக்கு எண்ணிக்கையில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை வைத்திருக்கும் பாஜக வேட்பாளர், முன்கூட்டியே 2 ஆயிரம் கிலோ இனிப்புகள் ஆர்டர் செய்துள்ளார்.
மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 23-ம் தேதி மக்களுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகளுக்கு இப்போதே ஆர்டர் கொடுத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜகவுக்குத்தான் மீண்டும் வெற்றி என்பதுபோல் உள்ளதால் தனது வெற்றி உறுதி என்று இனிப்புகளுக்கு கோபால் ஷெட்டி ஆர்டர் கொடுத்துள்ளார். இதனால் உற்சாகமான இனிப்பக தொழிலாளர்கள், மோடியின் முகமூடி அணிந்து இனிப்புகள் தயாரித்து வருகிறார்கள்.