/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mulayam434.jpg)
மறைந்த முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளன.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் நேற்று (10/10/2022) காலமானார். அவரது உடல் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், சைஃபாயில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் முலாயம் சிங் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று (11/10/2022) மாலை நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)