Published on 13/02/2019 | Edited on 13/02/2019

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது அடுத்த முறையும் பிரதமராக நரேந்திர மோடி தான் வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 'பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். மோடியே மீண்டும் பிரதமராக வருவார். அவர் தான் எங்களது விருப்பத்திற்குரிய பிரதமர். மோடியின் ஆட்சியில் அனைத்து கோப்புகளும் வேகமாக நகருகின்றன. அடுத்த முறையும் அவரே பிரதமராக வந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என கூறினார். சமீபத்தில் காங்கிரஸ் அமைத்த கூட்டணியிலிருந்து சமாஜ்வாதி கட்சி விலகிய நிலையில் அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவ் -வின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.