/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/YOGI5454.jpg)
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (10/10/2022) காலை 08.16 AM மணிக்கு காலமானார்.
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி, உத்தரபிரதேசத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான சைஃபாய் கிராமத்தில் நடைபெறும் என்று முலாயம் சிங் யாதவின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)