Advertisment

பதவி விலகிய முகேஷ் அம்பானி... 'ரிலையன்ஸ் ஜியோ'வில் அதிரடி மாற்றம்

Mukesh Ambani resigns

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரும், முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

முகேஷ் அம்பானி 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த பொறுப்பை அவரது மகனான ஆகாஷ் அம்பானி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆகாஷ் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் மகள் ஆகிய இருவரும் 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களைக் கவனித்து வந்தார்கள். மேலும் பங்கஜ் மோகன் பவார் 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் புதிய மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திரசிங் குஜ்ரால், கே.வி.சௌத்ரி ஆகியோர் கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனங்கள் ஐந்து வருடங்களுக்கானவை என 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

India Businessman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe