இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த திங்கள் அன்றுகடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இதன் விளைவாக முகேஷ் அம்பானிஆசியப்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவதுஇடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளார்.

Advertisment

mukesh ambani loses his position as asias richest person

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கரோனாவைரஸ்தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தீவிரமடைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய் விலையும் சர்வதேசச் சந்தையில் 30% வரை சரிந்துள்ளது. இந்நிலையில்,இந்தியப்பங்குச்சந்தை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திங்கள் அன்று ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது.குறிப்பாகக்கச்சா எண்ணெய் விலைசரிவைத்தொடர்ந்துரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்நிறுவனப்பங்குகள் கடும்வீழ்ச்சியைச்சந்தித்தன.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சுமார் 580 கோடி டாலர்அளவுக்குச்சரிந்தது. கடந்த 11 ஆண்டுகளில்ரிலையன்ஸ்நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவே ஆகும். இதன் காரணமாக ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில்முதலிடத்திலிருந்தஅம்பானி இரண்டாம்இடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளார். அலிபாபா குழும நிறுவனர்ஜாக்மா4,450 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவரது சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட 260 கோடி டாலர் அதிகமாகும்.

Advertisment