காங்கிரஸில் முகேஷ் அம்பானி! பாஜகவில் மகன் ஆனந்த் அம்பானி!

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அம்பானி நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் , இவர்களின் நிறுவனங்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிகளை அளித்து வருவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் தான் ரபேல் போர் விமான ஒப்பந்தம் அனில் அம்பானி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா ராகுல் காந்தி மற்றும் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சி , தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ambani

இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அந்த தொகுதியில் போட்டியிடும் சிவசேனா கட்சியின் வேட்பாளர் அரவிந்த் சாவந்த் ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியாவில் நம்பர் ஒன் தொழில் அதிபராக உள்ள முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிபிரதமர் நரேந்திரமோடிபிரச்சாரப் பயணத்தில் பங்கேற்றது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதே மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மில்லிண்ட் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவளித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் டிவிட்டர் வாயிலாக பேசிய வீடியோ வெளியானததாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ பதிவில் தெற்கு மும்பை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மில்லிண்ட் அவர்கள் சிறந்த சூற்றுச்சூழல் ஆர்வமுள்ளவர் மற்றும் பொருளாதார அறிவுள்ளவர். இவருக்கு மக்கள் வாக்களித்தால் தெற்கு மும்பையை முழுவதும் மாற்றிவிடுவார் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரே மக்களவை தொகுதியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு மகன் பாஜக வேட்பாளருக்கும் , தந்தை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருவதது இந்திய மக்கள் உட்பட எதிர்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் இனி காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி அவர்களை பற்றி பொதுக்கூட்டத்தில் பேச மாட்டார்கள் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மத்தியில் ஆண்ட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொழிலதிபர்களுக்கு ஆதரவளித்து வந்ததை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்காம் கட்டமாக 17 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சந்தோஷ், சேலம்.

ambani congress election campaign mukesh ambani
இதையும் படியுங்கள்
Subscribe