mukesh ambani becomes worlds fourth wealthiest man

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின்படி, முகேஷ் அம்பானி தற்போது உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில், உலக கோடீஸ்வரர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்நிறுவனத்தை லாபமீட்ட வைத்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களில் ஃபேஸ்புக், சில்வர் லேக் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து சுமார் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

Advertisment

இதன்மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், அவரது தற்போதைய சொத்து மதிப்பு 80.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் எல்.வி.எம்.ஹெச். தலைவரான பெர்னார்டு அர்னால்டை ஐந்தாவது இடத்திற்குத் தள்ளி நான்காவது இடத்தைப்பிடித்துள்ளார் அம்பானி. இதன்மூலம் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸுக்கு பிறகு உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையைஅவர் அடைந்துள்ளார். இதில் கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 12 பில்லியன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.