Advertisment

பொதுமேடையில் அமித்ஷா குறித்து பேசிய முகேஷ் அம்பானி...

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 7 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

mukesh ambani about amit shah

இந்த நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, அமித்ஷாவை புகழ்ந்து பேசினார். அப்போது பேசிய அவர், "அமித் ஷா அவர்களே நீங்கள் தான் உண்மையான கர்மயோகி. இந்த நாட்டின் உண்மையான இரும்பு மனிதர் நீங்கள் தான். குஜராத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே உங்களை போன்ற தலைவர் கிடைத்தது பெருமை. உங்களின் கைகளில் இந்தியா மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

Advertisment

மிகப்பெரிய கனவுகளை காண்பதற்கு நீங்கள் தயங்குவதில்லை. அதுபோல உங்கள் இலக்கை எந்த தடையும் தாக்குவதில்லை. உங்கள் எண்ணங்கள் மற்றும் கனவுளால் வரும்காலத்தில் இந்தியாவில் பல புதிய வாய்ப்புகள் தோன்றும் என நம்புகிறோம்’’ என பேசினார். அதன்பின் பேசிய அமித்ஷா முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்து, பின்னர் இந்திய பொருளாதாரம், பாஜக ஆட்சி உள்ளிட்டவற்றை பற்றி பேசினார்.

Amit shah mukesh ambani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe