இஸ்லாமியர்களின் ஒற்றுமையின் அடையாளமாக விளங்குவது மொகரம் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையானது இன்று (06.07.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்சூர் வட்டத்திற்கு உட்பட்ட ஏரகுண்டி கிராமத்தில் மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியான கஃபால் இரவை கொண்டாட்ட ஹூசைன் ஆலம் தர்கா முன் அக்னிக் குண்டத்தில் விறகுக் கட்டைகள் வைத்து தீ மூட்டப்பட்டது.
அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹனுமந்தா பாட்டில் என்பவர் என்பவர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அக்னிக் குண்டத்தில் தவறி விழுந்தார். இதனால் அவரது உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஹனுமந்தா பாட்டில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/06/muharam-2025-07-06-17-00-19.jpg)