ராமர் கோயில் கட்ட தங்கச் செங்கல்- முகலாய இளவரசர் ஹபீபுதீன் டூஸி...

முகலாய வம்சாவளியைச் சேர்ந்த இளவரசர் என உரிமை கோரும் ஹபீபுதீன் டூஸி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தக்க செங்கல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

mughal descend about ayodhya case

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை என்னிடம் ஒப்படைத்தால் அதை நானே ராமர் கோயிலுக்குத் தானமாக வழங்குவேன். பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் கோயில் இருந்தது என்ற இந்துக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளை நான் மதிக்கிறேன். மேலும் ராமர் கோயில் கட்டிக்கொள்ள, தங்கச் செங்கல் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்குவேன்" என கூறியுள்ளார்.

இதுவரை அயோத்திக்கு மூன்று முறை சென்றிருக்கும் அவர் அங்குள்ள தற்காலிக ராமர் கோயிலில் வணங்கியிருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு ராமர் கோயிலுக்கு சென்றபோதும் அயோத்தி நிலத்தை கோயிலுக்கே அளித்துவிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும், ராமர் கோயில் சிதைக்கப்பட்டதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ayodhya babri masjid case Ram mandir
இதையும் படியுங்கள்
Subscribe