உலக அளவில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்ட் வழங்கும் நிறுவனமான மாஸ்டர் கார்ட் நிறுவனம், இந்திய கிரிக்கெட் வீரர்எம்.எஸ்.தோனியை தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக ஒரு வருடத்திற்கு இருப்பார் என்றுஅறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுபாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தோனியும் அவருடன் இணைந்து இருக்கிறார். மேலும்கடந்த மாதம்தான் எம்.எஸ்.தோனி ஜெர்மனி நிறுவனமான வார்டுவிஸ் (wardwiz) நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுக்களுக்கும்,புனேவின் இண்டிகோ பெயிண்ட்ஸ்(Indigo paints)நிறுவனத்திற்கும்மூன்று வருடங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது