hh

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அனைவரும் தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அனைத்து எம்.பிக்களும் முகக் கவசம் அணிந்து அவையில் உரையாற்றி வருகிறார்கள். இந்நிலையில், பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் முகக் கவசத்தைக் கழற்றிவிட்டுப் பேசக்கூடாது என்று வெங்கையா நாயுடு எச்சரிக்கை செய்துள்ளார்.

Advertisment