ADVERTISEMENT

கேப்டன் வருண் சிங்கிற்கு சிலை; குடும்பத்தினருடன் ஆலோசனை - ம.பி முதல்வர் அறிவிப்பு!

05:56 PM Dec 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில் வருண் சிங்கின் உடல் இன்று மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வருண் சிங்கின் உடலுக்கு மாநில அரசின் மரியாதையுடனும், இராணுவ மரியாதையுடனும் இறுதி சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் வருண் சிங்கின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ள சிவராஜ் சிங் சவுகான், வருண் சிங்கின் குடும்பத்தினருடன் ஆலோசித்து, அவருக்கு சிலை வைப்பது குறித்தும், அவரது பெயரை அரசு நிறுவனத்திற்கு சூட்டுவது குறித்தும் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT