nn

ஓடும் ஆட்டோவில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்ஆட்டோவிலிருந்து சாலையில் எகிறிக் குதித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பொழுது ஓட்டுநரிடமிருந்து தப்பிக்க முயன்ற இளம்பெண் சாலையில் எகிறிக் குதித்தார். உடனே அங்கிருந்த சிலர் சாலையில் கிடந்த அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் சையது அக்பர் ஹமீதை போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதைத்தொடர்ந்து இளம்பெண் சாலையில் குதித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.