Advertisment

அம்மாவின் ஆசை; ஐசியூவில் திருமணம் - வைரலாகும் வீடியோ

Mother's Desire; Wedding in ICU-Video goes viral

Advertisment

நோய்வாய்ப்பட்டு மரணத்தின் இறுதி வாயிலில் படுத்துக்கொண்டிருக்கும் தாய், தனது மகளின் திருமணத்தைக் காண வேண்டும் எனத்தனது இறுதி கோரிக்கையை வைக்க, அதனை நிறைவேற்றும் வகையில் ஐசியூ வார்டிலேயே மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகாரின் கயா பகுதியிலிருந்த பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் எந்த நேரத்திலும் இறக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் தாய் தனது மகளின் திருமணத்தைக் காண வேண்டும் எனத்தனது இறுதி ஆசையைத்தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகள் அந்த தனியார் மருத்துவமனையில் ஐசியூ வார்டிலேயே தாய்க்கு முன்பு இளைஞர் ஒருவரை மணந்து கொண்டார். இந்த நிகழ்வில் தாயின் ஆசை நிறைவேறியது. இருந்தாலும் திருமணம் நடைபெற்ற இரண்டு மணி நேரத்திலேயே அவர்உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Bihar ICU marriage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe