/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rape case ni_1.jpg)
கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள சாலையில், 10 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றுத்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அந்தச் சிறுமியை அழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் அந்தச் சிறுமியை குழந்தைகள்நலக் குழுவிடம் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறினர். அதன் பேரில், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில்,சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால்அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், உத்திபிரதேசம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியினுடைய தந்தைஇறந்துவிட்டார். அதன் பிறகு, சிறுமியும், அவரது சகோதரரும், தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் தாயார், சிறுமியையும், அவரது சகோதரரையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.
அங்கு சிறுமியின் தாயினுடைய ஆண் நண்பர், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை காரணமாக சிறுமியின் சகோதரர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே, தனது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. மேலும், அவரது தாயார், சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ள கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை தாங்காமல் சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் ஆண் நண்பர் ராஜுவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு தள்ள கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us