/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_66.jpg)
5 வயது மகளை சித்ரவதை செய்து கொதிக்கும் நீரில் கையை வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனாவில் உள்ள கைலாராஸின் திலோங்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் கியான் சிங் யாதவ். இவரது மனைவி பிரியங்கா. இந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரியங்கா தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் முன் கதவு திறந்திருப்பதை உணர்ந்த பிரியங்கா, தனது 5 வயது மகளிடம் கதவை மூடுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த குழந்தை தாய் சொன்னதை மறந்து கதவை மூட மறந்துள்ளது. இதற்கிடையில், வீட்டிற்குள் நுழைந்த நாய் ஒன்று சமையில் அறையில் இருந்த பாலை குடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரியங்கா, தனது மகளை கடுமையாக திட்டியுள்ளார். அப்போது, பிரியங்காவின் மாமியார் குறுக்கிட்டு, ‘ஏன் நீயே கதவை மூடவில்லை’ என பிரியங்காவிடம் கேட்டுள்ளார்.
இதை கேட்டு மேலும் ஆத்திரமடைந்த பிரியங்கா, தனது மகளை கடுமையாக அடித்துவிட்டு அவளது இடது கையை பிடித்து கொதிக்கும் நீரில் போட்டுள்ளார். இதனால், குழந்தையின் கை முழுவதுமாக எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரியங்காவின் மாமியார் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)