4 குழந்தைகளைக் கிணற்றில் வீசிய தாய்; அரங்கேறிய கொடூரம்!

Mother throws 4 children into a well in Madhya Pradesh

மத்தியப்பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பிபல்கேடா கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரோட்டு சிங் - சுகுணா பாய் தம்பதியினர். இந்தத்தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரோட்டு சிங்கிற்கும் அவரது மனைவி சுகுணா பாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனைத் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இந்தத்தகராறு முற்ற, மனைவி சுகுணா பாய் கோபித்துக்கொண்டு தனது 4 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுடன் சுகுணா பாய் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அருகே உள்ள கிணற்றில் தனது 4 குழந்தைகளையும் வீசிய சுகுணா பாய், அதே கிணற்றில் தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கவனித்த அப்பகுதியினர் உடனடியாக கிணற்றில் குதித்து சுகுணா பாயை காப்பாற்றினர். ஆனால் அவரது 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு 4 குழந்தைகளின் உடலை சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

mother
இதையும் படியுங்கள்
Subscribe