சொந்த மகளுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் லால் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் மகளுடன் ஏற்பட்ட சண்டையே இந்த பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் "சில வாரங்களாகவே மகளுக்கும் தாய்க்கும் நகை வாங்குவது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று அந்த சண்டை உச்சத்துக்கு செல்லவே அந்த பெண் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை அவரை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்த அவரின் தாய் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்று தெரிய வந்துள்ளது.
Follow Us