தாய் மற்றும் மகள் இருவரும் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு குடியரசுத்தலைவருக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளனர்.

Passive

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சாஷி மிஷ்ரா (வயது 59) மற்றும் அவரது மகள் அனாமிகா மிஷ்ரா (வயது 33). இவர்கள் இருவரும் தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கவனிப்பாரற்று அவதியுற்று வரும் தங்கள் இருவரையும் கருணைக்கொலை செய்யுமாறு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கான்பூர் மாவட்ட நீதிபதி ராஜ் நாராயண் பாண்டே, ‘தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பெண்கள் கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதி கோரியிருக்கின்றனர். அவர்களது கடிதத்தை குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக ரூ.50ஆயிரம் மட்டும் அரசு தரப்பு மருத்துவ நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தாலும், அது போதவில்லை சாஷி மிஷ்ரா தெரிவித்திருக்கிறார். முன்னதாக உச்சநீதிமன்றம் சில விதிகளுக்குட்பட்டு கருணைக்கொலை செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.