தந்தையைக் கட்டிப்போட்டு தாய் மற்றும் மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Rape

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பீகார் மாநிலத்தில் உள்ளது கயா மாவட்டம். இந்தப் பகுதியில் உள்ள சோந்தியா கிராமத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவம் அடிக்கடி நடந்தேறியுள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு தனது கிளினிக்கை பூட்டிவிட்டு மருத்துவர் அவரது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல், சரிமாரியாக தாக்கி காட்டுக்குள் இழுத்துச்சென்றுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற மருத்துவரை மரத்தில் கட்டிப்போட்ட கும்பல், தாய் மற்றும் மகளை துப்பாக்கி முனையில் வைத்து வன்புணர்வு செய்துள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தற்போது தாக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த புகார் மற்றும் அடையாளம் காட்டியதை வைத்து இதுவரை குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். பா.ஜ.க. உடன் ஐக்கிய ஜனதா தளம் கைக்கோர்த்ததில் இருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்று, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.