mother and son beat tortured for Young woman refused do illegal

Advertisment

ஆபாசப் படத்தில் நடிக்க மறுத்ததற்காக இளம்பெண்ணை, ஒரு ஆணும் அவரது தாயாரும் அடித்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அரியன் கான் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தினால், அதிக வருமானம் தரும் வேலையை அந்த பெண்ணுக்கு அரியன் கான் வழங்கியுள்ளார். அதன்படி, ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த பெண், அரியன் கானை நம்பி அவர் இருக்கும் பிளாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை, அரியன் கானும் அவரது தாய் ஸ்வேத கானும் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளனர்.

ஆபாசப் படங்களில் நடிக்க வேண்டும் எனவும், பார் நடனக் கலைஞராக வேலை செய்ய வேண்டும் என்ற தாயும் மகனும் சேர்ந்த அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு அந்த பெண் சம்மதிக்காததால், அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். பல நாட்களாக உணவு வழங்காமல், இரும்புக் கம்பியால் கைகள், கால்கல் என உடல் முழுவதும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இன்னும் ஒரு படி மேலே சென்று, அந்த பெண்ணின் அந்தரங்க பகுதியில் இரும்புக் கம்பியைச் சொருகி தாக்கவும் முயன்றுள்ளனர். 6 மாத காலமாக கடுமையான கொடுமைகளை தாங்கிக் கொண்டிருந்த அந்த பெண் ஒரு வழியாக, அரியன் கானின் வீட்டில் இருந்து தப்பி வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்ற அவர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து அந்த பெண் கதறி அழுதுள்ளார்.

Advertisment

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கர்தாஹா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், அரியன் கான் மற்றும் ஸ்வேதா கான் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஸ்வேதா கான், ஆரியன் கானுடன் இணைந்து ‘இசாரா என்டர்டெயின்மென்ட்’ ன்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்கள் 2021 ஆம் ஆண்டு தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளனர். அந்த சேனலில், கடந்த நான்கு ஆண்டுகளில் 11 இசை வீடியோக்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு ஆபாச மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆரியன் கானும் அவரது தாயார் ஸ்வேதா கானும் அந்தப் பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஆரியனும் அவரது தாயாரும் தாங்கள் தங்கியிருந்த பிளாட்டுக்கு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்த அரியன் கான், தங்களுக்கு எதிராக நிற்பவர்கள் மீது காவல்துறையில் பொய்யான புகார்களைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உடல் முழுவதும் காயப்பட்டு பாதிக்கப்பட்ட பெண், உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.