Mother and father have problem in naming the child; The twist given by the court

Advertisment

குழந்தைக்கு பெயர் வைப்பதில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்ற நிலையில் நீதிமன்றம் யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு ஒன்றை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் ஒரு தம்பதியினர் பிறந்த குழந்தைக்கு 'புன்யா நாயர் 'என பெயர் வைக்க வேண்டும் என குழந்தையின் தாயும், 'பத்மா நாயர்' என பெயர் வைக்க வேண்டும் என குழந்தையின் தந்தையும் முடிவு செய்தனர்.இதனால் பெயர் வைப்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய் தந்தைக்கு இடையேயான தகராறை தீர்ப்பதற்கு காலதாமதம் ஆகும். இந்த காலதாமதத்தால் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாத நிலை ஏற்பட்டு விடும். இது குழந்தையின் நலனை பாதிக்கும் என கருத்து தெரிவித்து, தாய் தந்தையாகி இருவரின் கருத்தையும் எடுத்துக் கொள்ளாமல் புன்யா பால கங்காதர் நாயர் என நீதிமன்றமே பெயர் சூட்டியது.