இந்திய அளவில் அதிக லைக்குகள், ரீ ட்வீட் செய்யப்பட்ட, டாப் 10 ட்விட்டர் பதிவுகள் பற்றிய விவரத்தை ட்விட்டர் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 2020 ஆங்கில புத்தாண்டு விரைவில் வரவுள்ளதையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலின்படி, கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றிப் பெற்றதையடுத்து, மே 23 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவு அதிக லைக்குகளையும், அதிக அளவில் ரீ ட்வீட் செய்யப்பட்டும் உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

jh

நாம் ஒன்றாக வளர்கிறோம் என தொடங்கும் பிரதமர் மோடியின் அந்த ட்விட்டர் பதிவே இந்த ஆண்டின் அதிக லைக்குகள் ரீ ட்வீட் செய்யப்பட்ட பதிவாகி இந்திய அளவில் கோல்டன் ட்வீட் ஆகியுள்ளது.