/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sri-Reddy 600.jpg)
தெலுங்கு சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ஸ்ரீரெட்டி, தனக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி சில திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுபோல ஏமாற்றியவர்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். ஸ்ரீரெட்டி புகார் கிளப்பியது இந்தியா முழுவதும் பரபரப்பானது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் மகளிர் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரீரெட்டியையும் அழைத்து இருந்தனர். அப்போது இயக்குனர்கள் மீது ஸ்ரீரெட்டி மீண்டும் குற்றம் சாட்டினார்.
“தெலுங்கு இயக்குனர்களில் பெரும்பாலானவர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள்தான். அவர்களின் தொல்லைகளை நடிகைகள் துணிச்சலாக வெளியே சொல்ல தயங்குகிறார்கள். அப்படி சொன்னால் அடுத்த படத்துக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று பயப்படுகிறார்கள். தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்றும் அஞ்சுகிறார்கள். சம்பளத்தில் கூட பாரபட்சம் உள்ளது. கதாநாயகனுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். கதாநாயகிக்கு ரூ.1 கோடி கூட கொடுப்பது இல்லை''என பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகை அபூர்வா பேசும்போது “அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது பாலியல் புகார் கூறினால் நடிகையின் மீது அபாண்டமாக பழி சுமத்தி வாழ்க்கையை நாசம் செய்து விடுகிறார்கள். இதனால் நடிகைகள் பயப்படுகிறார்கள்”இவ்வாறு அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)