நாட்டிலேயே அதிகபட்சமான இனக்கலவரங்கள் நடக்கும் மாநிலம் என உத்தரப்பிரதேசம் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Communal

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆகிர் நாடு முழுவதும் நடைபெற்ற இனக்கலவரங்கள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், 2017ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 822 இனக்கலவரங்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டில் 703 மற்றும் 2015ஆம் ஆண்டு 751 இனக்கலவரங்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டைப் பொருத்தமட்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 195 இனக்கலவரங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகா (100), ராஜஸ்தான் (91), பீகார் (85), மத்தியப்பிரதேசம் (60) மற்றும் இதர மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Advertisment

2016ஆம் ஆண்டிலும் உத்தரப்பிரதேசம் மாநிலமே முதலிடத்தில் (162) இருந்தது. மதம், நிலம் மற்றும் சொத்துக்கள், பாலின விவகாரங்கள் மற்றும் சமூக வலைதள விவகாரங்கள் ஏற்பட்ட கலவரங்களை இனக்கலவரங்களாக எடுத்துக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.