இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கரோனாவைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி, கரோனாபரவல் குறித்து இன்று (08.04.2021) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தநிலையில், கடந்த 24மணி நேரத்தில்1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1 லட்சத்து15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடந்த 4 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்கரோனாபாதிக்கப்பட்ட 685 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே மஹாராஷ்ட்ராமாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.