Advertisment

தினசரி கரோனா எண்ணிக்கை புதிய உச்சம்; மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய அரசு!

covid

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கரோனா எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் நேற்று (04.04.2021) ஒரேநாளில்மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 588 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும், மஹாராஷ்ட்ராவில் நேற்று ஒரேநாளில்57 ஆயிரத்து 74 பேருக்கு கரோனாதொற்று உறுதியாகிவுள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரேநாளில் இத்தனை பேருக்கு கரோனாஉறுதியாவதுஇதுவே முதல்முறையாகும். டெல்லியிலும் நேற்று ஒரேநாளில்4 ஆயிரம் பேருக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் கரோனாபரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா அதிகமுள்ள 11 மாநில/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

corona virus union health minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe