Advertisment

போதை மருந்து விவகாரத்தில் பிரபல நடிகர்கள்! திரையுலகம் அதிர்ச்சி !

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆந்திர சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதை மருந்து சம்பவம் இதில் பிரபல நடிகர்கள்,நடிகைகள், தயாரிப்பாளர்கள் என சினிமா சம்மந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. போதைப் பொருட்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்புடையதாக தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என மொத்தம் 50 நபர்களுக்கு மேற்பட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு வழக்கு போடப்பட்டது. இவர்களிடமிருந்து விசாரணை நடத்தி அதன் பின்னர் ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

telugu cinema

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்த செய்தியை வெளியிட்டனர். அதில் போதை மருந்து மற்றும் இதில் தொடர்புடைய நடிகர்கள் 50க்கும் மேற்பட்டோரையும் குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கவில்லை என்றும் மேலும் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்து உள்ளனர். இது தெலுங்கு திரையுலகை பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளது.

case cinema Drugs police Producers telugu
இதையும் படியுங்கள்
Subscribe