Advertisment

ஆவியை விட மோசமான பாவியா இருக்கும் போலயே... பழி தீர்க்க 250 நாய்குட்டிகளை கொன்ற குரங்குகள்!

monkey - dog pupils

மஹாராஷ்ட்ராமாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கானில், குரங்குகள் பழிவாங்கும் விதமாக, ஒரே மாதத்தில் 250 நாய்களைகொன்றுள்ளதாகலோக்மத்என்ற மராத்தி மொழி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

அந்த பத்திரிகையிடம்பேசியுள்ள கிராமத்தினர், ஒரு நாய் குட்டி குரங்கு குட்டியை கொன்றுவிட்டதாகவும், அதனைத்தொடர்ந்து குரங்குகள் நாய் குட்டிகளைஉயரமான இடத்திற்கு இழுத்து சென்று தூக்கி எரிந்து கொன்றுள்ளதாகவும்தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கிராமத்தில் நாய்களேஇல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், குரங்குகள் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளையும் தாக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

குரங்குகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வனத்துறையிடம் புகாரளித்ததாககூறியுள்ள கிராமத்தினர், வனத்துறை அதிகாரிகள் ஒருநாள்வந்ததாகவும், ஆனால் ஒரு குரங்கை கூட பிடிக்கமுடியாமல்திரும்ப சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆவியை விட மோசமான பாவியாஇருக்கும் போலயே இந்த குரங்குகள் என எண்ணத்தைத்தான் இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.

dog Maharashtra monkeys
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe